நான் தினகரனை சந்திக்கவில்லை- செங்கோட்டையன்
நான் டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல் தவறானது. நான் அவரை சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை அடையாற்றில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த செங்கோட்டையன், “நான் டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல் தவறானது. நான் அவரை சந்திக்கவில்லை. பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று தான் சொன்னேன், யாரை இணைக்க வேண்டும் என்பது பொதுச்செயலாளரின் முடிவு. நல்லது நடக்கும் என நான் அமைதியாக உள்ளேன். எனது சொந்த வேலையாகவே சென்னைக்கு வந்தேன். மனைவியின் மருத்துவ காரணங்களுக்காகவே சென்னை வந்தென். யாரையும் பார்க்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தவிர வேறு எதையும் செய்யவில்லை. நல்லதே நடக்கும் என்பது என் நோக்கம்” என்றார்.

