ஆட்டுக்குட்டி லண்டன் போயிடுச்சு- அண்ணாமலையை தாக்கிய செல்லூர் ராஜு
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நக்கல் அடித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை 8-ம் தேதி மனித சங்கிலி போராட்டமும் ஒன்பதாம் தேதி மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.அதற்கான நிர்வாகி ஆலோசனைக் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். பேச்சை முடிக்கும்போது நான் பேசுவதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது, ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக் காட்டிய செல்லூர் ராஜு தலையை ஆட்டி கொண்டு இல்லாமல் உண்ணாவிரதத்திற்கு குறைந்தபட்சம் 200 நபர்கள் ஆவது ஒவ்வொருவரும் அழைத்து வர வேண்டும் என்று கூறினார்.

