"என்னை மட்டும் ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுனீங்க.. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா?"- செல்லூர் ராஜு

 
s

மக்கள் பயன்படுத்தும் சாம்பு மற்றும் சோப்பால்தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது என்று சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும் என  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ஷாம்பு, சோப்பால் ஆற்றில் நுரை வருதுன்னு சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்... இது உலகமகா கண்டுப்பிடிப்பு. நான் எகிப்தை ஈஜிபுத்-னு சொன்னதுக்கு என்ன எப்படிலாம் ஓட்டுனீங்க? தெர்மாக்கோல்னுலாம் சொன்னீங்களே... அதிகாரிகள் சொல்லி ஆற்றில் தெர்மாக்கோல் விட்டதற்கும் என்னை எப்படியெல்லாமோ கிண்டல் செய்தார்கள். ஆனால், அந்த அமைச்சரை யாரும் கிண்டல் செய்யவில்லை. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அட என்னங்கப்பா போங்கப்பா... அழுவ விடுறீங்கப்பா.. தனுஷைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. தவெக-வினர் தான் அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது நல்லது தான். ஆனால், யார் வந்தாலும் எம்ஜிஆர் ஆக முடியாது. மாயையில் தவெக-வுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். 

இந்த 6 மாத காலத்தில் மிகப்பெரிய வருத்தத்தை தான் தவெக அரசு கொடுத்துள்ளது. விஜயிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். தீபாவளி பரிசாக ஏமாற்றத்தையும், விலைவாசி ஏற்றத்தையும் தான் இந்த அரசு கொடுத்துள்ளது" என்றார்.