அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி- செல்லூர் ராஜூ
கூட்டணி தர்மத்துக்காக அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சிக்கிறது, இதில் தவறில்லை என செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

மதுரை பழங்காநத்ததில் போக்குவரத்துக்கழக பணிமனையில் தொகுதி மேம்பாடு சார்ந்த பணிகளை துவக்கி வைத்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில்,"குலவிளக்கு திட்டம் தான் ஒரிஜினல். அது கடந்த தேர்தல் அறிக்கையிலேயே அதிமுக சொன்னது. திமுக அதை ரகாப்பியடித்தது. ஆண்களில் பாவப்பட்ட ஏழை மக்களுக்கானது தான் பேருந்து பயண இலவச அறிவிப்பு. இப்படி எல்லாவற்றையும் காப்பி அடிப்பதே திமுகவின் வழக்கம். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே திமுக பயத்தில் ஆட்டம் கண்டுவிட்டது. எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்தது. எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் போன்று தான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்ததை விட அதிமுக இன்று அதிகம். கலைஞர் - இந்திராகாந்தி காலத்திலேயே சிறிய கட்சிகளுடன் கூட கூட்டணி வைத்து வெரன் ன்றவர் தான் எம்.ஜி.ஆர்.," என்றார்
டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி எடுக்கிறதா என்ற கேள்விக்கு, "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது. இதில் தப்பில்லை. ஓ.பி.எஸ்.ஐ மீண்டும் சேர்ப்பது என்பது பொதுசெயலாளர் முடிவு" என்றார்


