"யார் மின்மினி பூச்சி விஜய் வெறும் சினிமா கவர்ச்சி"- கிண்டலடித்த செல்லூர் ராஜூ

 
செல்லூர் ராஜூ செல்லூர் ராஜூ

சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் கூடும். அமிதாப் பச்சன் வந்தால் கூட கூட்டம் வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செல்லூர்


உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு புத்தாண்டு பண்டிகையொட்டி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும் போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, சமமான ஆட்சி, உண்மையான ஆட்சி அமைய வேண்டும். உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார். 

விஜய் கட்சிக்கு கூட்டம் கூடுகிறது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் கூடும். அமிதாப் பச்சன் வந்தால் கூட கூட்டம் வரும். மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உன்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். களத்தில் பணியாற்றும் எங்களுக்குதான் தெரியும்... யாருக்கு யார்? போட்டி என்று.... மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை இந்த நாள் வரை மக்கள் பிரச்சனை தீராமல் உள்ளது ‌. மதுரையில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்” என்றார்.