“ஆளுங்கட்சி மோசடி... நாங்க மட சாம்பிராணியா இருக்கிறோம்”- செல்லூர் ராஜூ

 
 sellur raju  sellur raju

மதுரையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு, “எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், சத்துணவு ஆயாக்கள், தூய்மை பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், மதுரையில் நிறைய பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் நிறைய இடங்களில் திரும்ப பெறவில்லை.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது” என கூறினார்.