“அண்ணாமலை மாற்றத்திற்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை”- செல்லூர் ராஜூ
Apr 11, 2025, 15:40 IST1744366205000

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றத்திற்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என அதிமுக முன்னாள அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு அதிமுக வலியுறுத்தவில்லை. பாஜகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடமாட்டோம். அதேபோல் எங்கள் கட்சி விவகாரங்களிலும் யாரும் தலையிட முடியாது. பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியும் கிடையாது வருத்தமும் கிடையாது. அண்ணாமலையை மாற்றுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறவில்லை” என்றார்.