"திருமாவளவன் நொந்து நூலாகிப்போய்விட்டார்"- செல்லூர் ராஜு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, “தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறு ஓடுகிறது. தமிழ்நாட்டின் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் 90% நிறைவேற்றி விட்டார்கள் எல்லாமே செஞ்சிட்ட அப்புறம் எதுக்கு இந்த முதல்வர்? கூட்டணி... கூட்டணி... என சொல்றாரு.....! கொள்கை கூட்டணி என அவர் தான் கூறுகிறாரே தவிர அவருடன் இருப்பவர்கள் யாரும் கூறவில்லை. இதில் இருந்தே தெரிகிறது ஏதோ வீக்னஸ் இருக்கிறது. அரசின் மீது மக்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.
திருமாவளவன் கூறியதை இதன் வாயிலாக முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். முதல்வர் தான் கூட்டணி குறித்து பேசுகிறாரே, தவிர அவருடன் உள்ளவர்கள் யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திருமாவளவன் நொந்து நூலாகிவிட்டார். வேங்கை வயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. திமுக எம்எல்ஏ வீட்டில் பட்டியலின சிறுமி தாக்குதலுக்கு ஆளாகப்பட்டு இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. கூட்டணி, கூட்டணி என்று இருக்கும் திருமாவளவன் எப்படி இருந்தேன், இப்படி ஆயிட்டேன் என்பதுதான் திருமாவின் நிலைமை. இந்த ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுகிறார்கள். இந்த அரசு தூக்கிப்பிடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்றைக்கு திமுக அரசை எதிர்க்கிறார்கள். தமிழக முதல்வர் கைகால் பிடித்து இந்த ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார். தாய்மார்களை மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. அதிமுகவினர் பெண்களுக்கு ஆதரவாக உடன் இருப்பர். சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை சுற்றி பெண்களை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவர் பேச்சு அனைவரது முகத்தையும் சுளிக்க வைக்கிறது” என்றார்.