“திமுக முழுவதும் ஜாமின் வாங்கிய அமைச்சர்களாக இருக்கிறார்கள்”- செல்லூர் ராஜூ

திமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியே பொதுச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறினார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி தான் பொதுச்செயலாளர், முதலமைச்சர். தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பிரபலமான நடிகர், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்.. இளைஞர்கள் பட்டாளம் அவருக்கு உள்ளது, எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.திமுக முழுவதும் ஜாமின் வாங்கிய அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதிமுக உட்கட்சி சிக்கலை நீங்கதான் ஊதி ஊதி பெருசாக்குறீங்க. நாங்கள் எடப்பாடியார் தலைமையை ஏற்று பயணிக்கிறோம். அவரையே முதல்வராக்க உள்ளோம். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று யார் வந்தாலும் வரவேற்போம். எடப்பாடியார் இல்லாத அதிமுக குறித்து ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கருத்து பற்றி அவர்களிடமே கேளுங்கள்” என்றார்.
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், எங்கு சென்றாலும் அவரையும் அழைத்துச் செல்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன், என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என நகைச்சுவையாக கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள் என அவருக்கான பாணியில் தெரிவித்தார்