அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை- செல்லூர் ராஜூ

 
sellur

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை, திமுக ஆட்சியில்தான் விற்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால்...” -  செல்லூர் ராஜூ | sellur raju said there is no issue between admk and bjp -  hindutamil.in

மதுரை பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை. கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. 

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா? சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும். பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும். நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு. மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார்” என்றார்.