அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளன- சசிகலா
Jul 3, 2024, 18:00 IST1720009837000

அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம். சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும். ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு பெண் முதலமைச்சர் என்பதால், அனைவரும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.
ஜெயலலிதா தமது ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு கண்டார். தமிழக காவல்துறை தற்போது சரியாக செயல்படவில்லை” என்றார்.