“எடப்பாடி பழனிச்சாமியின் சேவைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்”- ஆர்.பி.உதயகுமார்
அதிமுக காப்பாற்ற போவதாக டிடிவி தினகரன் எடுப்பது பழைய படம், புதிய பிரிண்ட், அவரின் படம் மக்களிடம் ஒடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை தல்லாகுளத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அமமுக கட்சி நடத்தும் டிடிவி திடீரென அதிமுக காப்பற்ற புதிய அவதராம் எடுத்துள்ளார். டிடிவி தினகரன் எடுப்பது பழைய படம், புதிய பிரிண்ட், அவரின் படம் மக்களிடம் ஒடாது, டிடிவி தினகரன் தன்னை இராஜராஜசோழன், நீங்கள் தான் அதிமுகவை மீட்டு தாருங்கள் என தொண்டர்கள் யாரும் டிடிவி-யிடம் கேட்கவில்லை, ஒரு தேர்தலில் கூட அமமுக வெற்றி பெறவில்லை. தேர்தலில் டிடிவி தினகரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரனின் கொள்கை, கோட்பாடு, லட்சியம் எங்களுக்கு தேவை இல்லை, மக்கள் முடிவு செய்துவிட்டார்கள், அதிமுக வேண்டாம் என அமமுகவை தொடங்கிய டிடிவி தினகரன் இன்று தாய் வீட்டுக்கு வர வேண்டுமென பேசுகிறார், எடப்பாடி பழனிச்சாமியின் சேவைக்கு நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுக்கலாம், ஆனால், வரலாற்றில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுத்ததில்லை.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரின் மகன் உதவி செய்வது சட்டவிரோதம் கிடையாது, இதனை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள், அதை திசை திருப்பும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரே மாதிரியாக தான் அமைந்துள்ளது, சோழமண்டலம், பாண்டிய மண்டலம் என மக்கள் பிரித்துப் பார்த்து வாக்களிக்கவில்லை, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். செங்கோட்டையனின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என எனக்கு எப்படி தெரியும்? செங்கோட்டையன் பின்புலத்தில் யார் இருந்தால் எனக்கென்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.


