“விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார்”- ஆர்.பி.உதயகுமார்

 
s s

தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டை காக்க வந்த 'அவதார புருஷன்' போல் விஜய் தன்னை நினைத்துக்கொள்கிறார்- ஆர்.பி.உதயகுமார்

தவெக 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது தவெகவின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறியிருந்தார். அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று அவர் கூறியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும், மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து தான் அதிமுக தேர்தல் களத்தில் நிற்கிறது, விஜயின் கருத்துக்களை நம்பி அதிமுக இல்லை. தொண்டர்களின் எண்ணத்தை விஜய் சிதைக்க வேண்டாம். மாநாட்டில் என்ன பேசவேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு. தொண்டர்களின் உழைப்பை விஜய் வீணடிக்க வேண்டாம். அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார்.திமுகவை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும்” என்றார்.