எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க எதையும் செய்ய தயார்- ஆர்.பி. உதயகுமார்
2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்வோம் , அவரை முதலமைச்சர் ஆக்குவதே எங்களது குறிக்கோள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் அமைந்துள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், அதிமுகவின் 53வது ஆண்டு, கட்சி தொடக்க விழாவையொட்டி, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றினக் கூறியதுடன், ய ஆர்.பி.உதயகுமார், “வருகிற 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது எனது குறிக்கோள் எனவும், அதற்காக உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எதனையும் செய்ய தயாராக உள்ளேன்” என்ரார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 1000 -க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி, புத்தாடையாக கட்சி வேஷ்டிகளை வழங்கும்போது, ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு அதனை பெறுவதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டு , ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் கையில் சிக்கிய புது வேஷ்டிகளை எடுத்துக் கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


