“கடைசி 4 நாட்களில் மக்கள் செல்போனில் மயங்கி தவெகவுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள்”- ராஜேந்திரபாலாஜி

 
s

கடைசி 4 நாட்களில் மக்கள் செல்போனில் மயங்கி தவெகவுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி, “2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன். விஜய் வாங்கியது அனைத்தும் அதிமுகவின் ஓட்டுகளே. திமுகவின் ஓட்டு அப்படியே திமுகவிற்கே சென்றது. கடைசி 4 நாட்களில் மக்கள் செல்போனில் மயங்கி ஓட்டு போட்டுவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வந்திருப்பது காலம் தந்த கொடை. அவரை விட்டால் கட்சியில் சரியான தலைமை கிடையாது. Instagram மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது. மாயையில் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்றார்.