“தவெகவினர் விரும்பினால் அவர்களோடு ஈபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார்”- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி ராஜேந்திர பாலாஜி

நெல்லையில் வஉசிதம்பரனார் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற ஒரு அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். 

ராஜேந்திர பாலாஜி பேட்டி


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம்,  பிரதமர் மோடியை டாடி என்கிறீர்களே அவர்கள் துணை முதல்வர் இடத்தை கேட்டால் கொடுப்பீர்களா உங்கள் கருத்து என்ன..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதை எங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் என்றார். தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி குறித்து ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களா.? என்ற கேள்விக்கு தமிழக வெற்றி கழகத்தினர் விரும்பினால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு கூட்டணி குறித்து பேசுவார் என்றார்.


அதிமுகவில் உள்ள சலசலப்புகள் எப்போது தீரும் என்ற கேள்விக்கு.... அதிமுகவில் எந்த சலசலப்புகளும் இல்லை.  பளபளப்பாக இருக்கிறது. பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா..? என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒருங்கிணைப்பு என்றால் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரிடம்தான் பேச வேண்டும். ஏனென்றால் அவர்கள் எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தானே. அதிமுகவிற்கு எது தேவையோ அதை எடப்பாடி பழனிச்சாமி செய்வார். எஸ்ஐஆர் என்பது போலி வாக்காளர்களை நீக்குவது. இரட்டை வாக்காளர்களை நீக்குவது. அதுதான் அதனுடைய நோக்கம். பீகாரில் என்ன நடந்ததோ அந்த முடிவுதான் தமிழகத்திலும் நடக்கப்போகிறது.எஸ் ஐ ஆர் பாஜக கொண்டு வந்தது அல்ல. டெல்லியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்ட பொழுது பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இங்கு வரவில்லை. ராகுல் காந்தி சிறுபிள்ளை போல நடந்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் எல்லா இடத்திலும் தோற்று போய்க்கொண்டு தான் இருக்கிறது, வளரவில்லை.
ஆனால் எங்கள் கூட்டண அற்புதமான, பலமான கூட்டணி” என்று கூறினார்.