"1 ஓட்டுதானே தவெகவுக்கு போட்டா என்ன ஆகிடும்னு யோசிச்சு எல்லாரும் ஒரு ஒரு ஓட்டு போட்டு வச்சிருக்கீங்க.."- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “முதல்வர் விஜய் லண்டன் சென்றார். அங்கு விளையாட்டு போட்டியை தொடங்கிவைக்க போனார்... தொழில் முதலீட்டை ஈர்க்க போனார் என பார்த்தால் அங்கு வேற என்னமோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த வேலையை பார்க்கவா முதலமைச்சரா தேர்ந்தெடுதோம்? இதுக்காகவா ஓட்டு போட்டோம்? ஏன் ஓட்டு போட்டோம்னே மக்களுக்கு தெரியல...தவெக வந்த 120 நாள்ல இவங்க ஆடுற ஆட்டம்..எல்லாம் ரீல்ஸ். 1 ஓட்டுதானே த.வெ.கவுக்கு போட்டா என்ன ஆகிடும்னு யோசிச்சு எல்லாரும் ஒரு ஒரு ஓட்டு போட்டு வெச்சிருக்கீங்க... விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் அங்கு சென்று ரீல்ஸ் போடுகிறார்கள். தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள். எங்கே போய் முடியப்போகிறது என்பதே தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின்வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். விபத்தில் முதலமைச்சரானவர் விஜய்...” என விமர்சித்தார்.