“டெபாசிட் இழக்க வேண்டும்”- ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு

 
s

நான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும், திமுக, காங்கிரஸ் இணைந்து சுக்கு நூறாக்கியது என அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.


தேர்தல் களப்பணி தொடர்பாக திருத்தங்கல் பகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “சிவகாசி தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக நின்றாலும்
அவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் நான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும், திமுக, காங்கிரஸ் இணைந்து சுக்கு நூறாக்கியது. 10 ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்தபோது திருத்தங்கல் பகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். திமுகவினர் எதையாவது செய்தார்களா.? சிவகாசி மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை” என்றார்.