“எங்களுக்கு சுயமரியாதை உள்ளது.. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது"- ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji rajendra balaji

அதிமுக தலைவர்கள் சுய மரியாதைத் தலைவர்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவுக்கு கொள்கை வேட்டி மாதிரி, கூட்டணி துண்டு மாதிரி, வேட்டி மானத்தை காப்பாற்ற துண்டு மரியாதையைக் காப்பாற்ற. அதிமுகவுக்கு சுயமரியாதை உண்டு. யாருக்கும் அ.தி.மு.க அடிமை கிடையாது. அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. உடைய வாய்ப்பே உல்லை. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு..கொள்கை என்பது வேட்டி. கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு.. கொள்கை என்பது வேட்டி. கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு” என்றார்.