“அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது”- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
நீதிமன்ற வழக்கும், விசாரணையும் நிலுவையில் உள்ள நிலையில் அண்ணா திமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார்.

அண்ணா திமுக மூத்த தலைவரும் ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் கடந்த 10 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு சட்டத்துக்கு புறம்பானது அதன் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள கூடாது, இரட்டை இலை சின்னம் வழங்கியதும் தவறு என தொடுத்த வழக்கு நிலுவையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உயர்நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு அண்ணா திமுக வழக்கு சம்பந்தமாக நிலுவையில் உள்ள மனுக்கள் வழக்குகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டு விசாரணையும், தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது உச்சநீதிமன்ற உத்தரவின்படி நிலுவையில் உள்ள சிவில் வழக்கு முடிவு தான் இறுதியானது சூரியமூர்த்தி தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ளது. இது போன்ற பல வழக்குகள் நிறுவையில் உள்ள நிலையில் தன்னை தானே பொதுச்செயலாளர் என்று சொல்லி சொல்லிக்கொண்டு ஊடகங்களை பழனிசாமி ஏமாற்றிக் கொண்டு வருகிறார்.

உயர்நீதிமன்றத்தில் தன்னை பொதுச் செயலாளர் என்று தவறாக போட்டு விட்டதாக கூறி திருத்தி இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஒப்பு கொண்டுள்ளார. ஆகவே நீதிமன்றங்களை அவமதிக்கும் போக்கில் தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு பொதுக்குழுவை கூட்டியது தவறு. எனவே அதன் முடிவுகளை தீர்மானங்களை தேர்தலானையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்கனவே தேர்தல் ஆணையம் புறக்கணித்து விட்டது. இம்முறை அதுபோல் நடந்து விடக்கூடாது, ஆகவே இரட்டை இலை சின்னத்தை விசாரணை முடியும் வரை ஒதுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் கூறிக் கொள்வது தவறானது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திரும்பத் திரும்ப மனு கொடுத்துள்ளோம்” என்றார்.


