கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படாதது ஏன்?- புகழேந்தி

 
ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகுதான் எங்க ஆட்டமே இருக்கு – புகழேந்தி

கொடநாடு கொலை வழக்கில் 17 பேரிடம்  இதுவரை காவல் துறை விசாரித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படாதது ஏன் என ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ஒரு வழியா விஜயலட்சுமி, வீரலக்ஷ்மி சீமான் கதை ஒழிந்து விட்டது, இரவோடு இரவாகவே முடிந்தது என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். இவர்களே புகார் தெரிவிப்பதும் இவர்களே வாபஸ் வாங்குவதும் வேடிக்கையாக உள்ளது. காஞ்சிபுரத்தில் ஓபிஸ் புரட்சி பயணம் மழையின் காரணமாக பாதியில் நின்றுவிட்டது வேதனை அளிக்கிறது. அடுத்த தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

தமிழ்நாட்டில் அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை இழிவாக பேசிவிட்டு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமிழகத்தில் வாழ்ந்து விட முடியாது. எச் ராஜா பொறுக்கி வேலைகளை எல்லாம் இங்கே காட்டக்கூடாது. இதை மீறியும் தவறாக பேசினால் தொண்டர்களின் வாய் பேசாது கைகள் தான் பேசும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரவேற்கிறேன்..இத்திட்டம் பாராட்டுக்குரியது. அதே போல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தொகை மகளிர் திட்டமும் வரவேற்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் அம்மா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் முன்கூட்டியே செய்து விட்டார்கள்.

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? – புகழேந்தி

கொடநாடு கொலை வழக்கில் 17 பேரிடம்  இதுவரை காவல் துறை விசாரித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இடம் விசாரணை நடத்தப்படாதது ஏன்? எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஏன் இந்த அரசாங்கம் பயப்பட வேண்டும்? அடுத்த ஒரு வாரத்தில் எடப்பாடியிடம் விசாரணை நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.