அண்ணாமலைக்கு மனநல பாதிப்பு- புகழேந்தி விமர்சனம்

 
pugalendhi

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக செய்தி தொடர்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வா புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். 

pugalendhi

அப்போது பேசிய புகழேந்தி, “ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையை தற்பொழுது பிஜேபி தலைவராக உள்ள அண்ணாமலை விமர்சித்து பேசி வருகிறார். ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி அவரைவிட தனது மனைவி நூறு மடங்கு உயர்ந்தவர் என்றும் தாயார் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என பேசியிருக்கிறார். இதுபோன்று பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு பிஜேபியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை போன்றவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 

ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து உலகமே வியந்து போற்றிய நிலைபாடுகளும் வரலாறும் உண்டு. எனவே இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பேசி வரும் அண்ணாமலை ஏற்கனவே பல தலைவர்கள் உளவியல் ரீதியாக அண்ணாமலை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இதுபோன்று விமர்சனங்களை வைத்து பேசுகிறார். எனவே அவர் ஒரு நல்ல மனநலம் மருத்துவமனையை அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது. எனவே இது போன்ற விமர்சனங்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்” எனக் கூறினார்.