ஓபிஎஸ்ஸையும் இணைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமா? - புகழேந்தி

 
pugalendhi

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காட்டுகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்திருந்தார்.

Pugalendhi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “ஈபிஎஸ் செயல்பாட்டால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான். ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச வேண்டும். 

கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தோற்றது 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே. டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு வரும் என்று அன்றே சொன்னேன். எடப்பாடி பழனிச்சாமி பேசியதை ஈரோடு மக்கள் ரசிக்கவில்லை . தோல்வியில் துவண்டு போயிருக்கிற அதிமுக தொண்டர்கள் கண்ணில் கண்ணீர் வருகிறது. அதிமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைத்திருந்தால்  ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம்  வெற்றி பெற்றிருக்கலாம். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மை தான். தூய்மையான வாக்கு என்றால் அது நாம்தமிழர் வாங்கிய வாக்கு மட்டுமே..!” எனக் கூறினார்.