தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சி.வி.சண்முகம் கைது!

 
ச்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் சி.வி.சண்முகம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விழுப்புரம் நான்கு முணை சந்திப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கையில் பதாகை ஏந்தி, முழக்கமிட்டு அனுமதியின்றி பேரணியாக செல்ல முயன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதில் காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சி.வி.சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரப்பாணி, அர்ச்சுனன்  உட்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர்.* *அதிமுகவினரின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.