கோவில்பட்டியில் பாஜகவை கண்டித்து அதிமுக போட்டி போராட்டம்

 
protest

பாஜகவின் மாநில ஐடி விங் நிர்வாகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து பாஜக நிர்வாகியை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்  மணியாச்சி பேருந்து நிலையம் அருகே பாஜக ஐடி விங் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Image

அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை திரளாக திரண்டு எரித்த பாஜக இளைஞரணி, எடப்பாடி ஒரு துரோகி எனவும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக- அதிமுக இடையே மோதல் வலுத்ததை தொடர்ந்து,  கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜகவினர் தார்மீக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்க வேண்டும் என்றும் பாஜகவினர் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் எனவும் அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், ஈபிஎஸ் உருவப்படத்தை பாஜகவினர் எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.