‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சார விற்பனை நடைபெறவில்லை’- ஆர்ப்பாட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு

 
‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சார விற்பனை நடைபெறவில்லை’- ஆர்ப்பாட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை கண்டித்து சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்,மாதவச்சேரி,சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விஷ சாராயம் அருந்தியதால் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்தும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அதிமுக வலியுறுத்துவதாகவும் மேலும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக அதிமுக சார்பில் நாளை தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்தும் தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் கள்ளச்சார விற்பனை நடைபெறவில்லை என்றும் கடந்த 2023 ஆம் ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கலாச்சாராயத்திற்காக 23 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயத்தால் தற்போது 58 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கள்ளச்சாராயத்தால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகியுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.