ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை - ஈபிஎஸ்

 
eps

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

EPS

இதில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

a

 அப்போது பேசிய ஈபிஎஸ் , ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை; சம்பளம் வாங்காமல் கருணாநிதிக்காக படம் நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்; எங்கள் தலைவர்கள் எதிரியையும் வாழ வைத்தவர்கள்; நீங்களாக திருந்தாவிட்டால், மக்கள்தான் உங்களை திருத்துவார்கள்  என்றார்.