“தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார்”
தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார் என அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி கூறுகையில், “தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார். சோஃபா வந்தது, விஜய் நேரில் வந்து சந்தித்தார். எனவே ஆதரவு கொடுத்தார். தற்போது தவெகவில் யாரும் மதிக்காததால் மீண்டும் அதிமுக வருகிறேன், பொறுப்பு கொடுங்கள் எனக் கேட்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்,
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மகனை அரசியலுக்கு கொண்டு வர இபிஎஸ் நாடகம் ஆடுகிறார்.அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. திமுகவுடன் கூட்டணி என்ற கருத்தை மட்டும் தான் ஏற்க முடியவில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட போதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டது. 8 ஆண்டுகளாக இபிஎஸ் சொன்ன அனைத்தையும் செய்தோம், அந்த பாவத்திற்காக தற்போது அனுபவித்து இருக்கிறோம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

