டிஆர்பி ராஜா மீது குவியும் புகார்கள்... கொந்தளிப்பில் அதிமுகவினர்

 
trb raja trb raja

திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளராக செயல்பட்டு வரும் TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் வேலூர் எஸ்பி. மதிவாணனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் புகார் அளித்தார்.

Government striving to make TN the global R&D capital: Industries Minister TRB  Rajaa

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த 17-ம் தேதி அன்று X தளத்தில் கேலிசித்திரம் வெளியிட்ட TRB ராஜா மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 1000-க்கும் மேற்பட்ட அதிமுக வினர் மாவட்ட மாநகர மாவட்டச் செயலாளர் SRK அப்பு, புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் ஆகியோர் தலமையில் மனு அளித்தனர். TRB ராஜாவின் செயலுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் பிரிவு 66, பிரிவு 67, பிரிவு 69, மற்றும் BNS Act 2023 கீழ் பிரிவு 124, 356, 354E ஆகியவற்றின் கீழ் வழக்கு பதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் X தளத்தில் பதிவிட்ட கேலிச்சித்திரத்தை இணைதளத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் தொழில்துறை அமைச்சரும் திமுக IT பிரிவு செயலாளருமான அமைச்சர் T.R.B.ராஜா மீது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர். கடந்த 17 -ஆம் தேதி X வலைதளத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் திமுக சமூகவவைதள கணக்கில் கார்ட்டூன் வெளியிட்ட தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான TRB.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூரில் மாவட்ட அதிமுக சார்பில் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் IPS அவர்களிடம் புகார் மனு அளித்தனர். அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தனர். இதேபோல் மதுரை எஸ்பியிடம்,  டி .ஆர்.பி ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார் அளித்தார். TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம் என்றும் அதிமுக IT WING செயலாளர் ராஜ் சத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.