நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை
தென்காசி அருகே நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சார்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் வெளியப்பன் (அதிமுக பிரமுகர் ) வழக்கம்போல நடை பயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவரது மனைவி மாரிச்செல்வி மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட முதலில் போது முன் விரோதம் காரணமாக படுகொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.