“அதிமுக ஆட்சியமைக்க உதயநிதி முன்னெடுத்தார்”- பாண்டியராஜன் பரபரப்பு தகவல்

 
s

அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என்று விஜய் விமர்சிப்பது தவறு என முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், “காசு கொடுத்து வாக்கு வாங்கும் நிலை போய்விட்டது. அதிமுகவின் 14 மாஜி அமைச்சர்கள் வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்கள். திமுக - அதிமுக கூட்டணி என்பது எந்த நிலையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம். புரட்சித் தலைவர் நல்லவர். அவர் உருவாக்கிய கட்சியைத் தீர்ந்த சக்தி என்று சொல்வது மிகவும் தவறான போக்கு. அதிமுகவிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என்று விஜய் விமர்சிப்பது தவறு. 30 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட கட்சியைத் தீர்ந்து போன கட்சி என்று நடிகர் விஜய் விமர்சிப்பது அவரது பதவிக்கு உகந்ததல்ல. ஆட்சி அமைக்க திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது யாரும் மறுக்க முடியாதது. உதயநிதியே அதற்கு முன்னெடுத்தார். ஆனால் அதிமுக அதை ஏற்கவில்லை.. நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது” என்றார்.