செய்தி சேகரித்த நிருபர் மீது தாக்குதல் - வன்முறையை ஒடுக்க நடவடிக்கை தேவை!!

 
ops

செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் முருங்கை ஊராட்சிக்கு உட்பட்ட முருங்கை கிராம ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் இம்மாதம் இரண்டாம் தேதி குட்டை அமைக்கும் பணி நடைபெற்றதாகவும், காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்களால் செய்ய வேண்டிய பணி ஜேசிபி எந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த செயல் 100 நாள் திட்ட பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ,  இதை அறிந்த தினமலர் நாளிதழ் மோகன் அந்த இடத்திற்கு சென்று செய்தி சேகரித்ததோடு , ஏரியில் மீன் பண்ணை குட்டை ஏற்படுத்தி அதை புகைப்படம் எடுத்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றதாகவும் ,சிறிது நேரத்தில் முருங்கை ஊராட்சி தலைவரின் மகன் ,மாமனார் மற்றும் திமுகவினர் 100 பேர் தினமலரின் வீட்டிற்கு சென்று அவர்களின் அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ,ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும்,  இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவரின் குடும்பத்தினர் மீண்டும் நிருபரின் வீட்டிற்கு சென்று ,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள நிருபரின் தந்தையே வயிற்றில் உதைத்ததுடன் ,  அவரின் தாயின்  தலைமுடியை பிடித்து இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும்  செய்திகள் வந்துள்ளன.

ops

திமுகவினரின் காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாளிதழின் நிருபர் என்றால் சாதாரண பொதுமக்கள் எந்த அளவுக்கு திமுகவினரால் பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.இது சமூக விரோத செயல் மட்டுமல்ல பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயல். இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரின் குடும்பத்தினர் , அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் அதற்கு , உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  எனவே பொதுமக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையிலும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர், இந்த அராஜகத்தை தட்டிக் கேட்காமல் அதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும்  இனி வருங்காலங்களில் இதுபோன்ற வன்முறை நிகழாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.