முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

 
ops mk stalin

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,  "அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நாணமேடு, உச்சிமேடு, செம்மண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தண்ணீர் புகுந்ததாக வண்டியிலிருந்து, கடலூர் வரை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கும், தண்ணீர் புகுந்து விட்டதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 22 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தளவானூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததாகவும், பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், முத்தம்பாளையம் அய்யன் கோவில் பட்டு கொய்யாத்தோப்பு கிராமங்களும் ,தண்ணீரால் மூழ்கியதாகவும் ஒரு கிராமத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 10,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில்,  திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஒன்றே கால் லட்சம் கன அடி தண்ணீர் அதாவது 12 மடங்கிற்கும் மேலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது தான் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்குதல் காரணம் என்றும், இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் தங்களுடைய உடமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அரசு நிர்வாகம் சரிவர செய்ததன் காரணமாக, மிகுந்த பரிதவிப்பு அப்பகுதி மக்கள் ஆளாக பட்டதாகவும், இரண்டு நாட்களாக தண்ணீர் வடிந்த நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாகவும், ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்துள்ளதாகவும் ,அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாக இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.



கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க வைக்கப் பட்டிருந்தாலும்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ,இழப்பீடு வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு ,கால்நடைகளை இறந்தவர்களுக்கான உரிய இழப்பீடு மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான உதவி ஆகியவற்றை செய்து தருவது அரசாங்கத்தின் கடமை.எனவே தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி அவர்களது மறுவாழ்விற்கு ,தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.