"கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்குக" - ஓபிஎஸ் கோரிக்கை!!

 
ops

தேர்தல் வாக்குறுதிப்படி, திமுக அரசு கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் கரும்புக்கு டன்னுக்கு 3500 ரூபாய் கேட்கிறார்கள் என சுட்டிக்காட்டி,  விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் அதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்தது.  திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டதையும் இந்த தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

karumbu

ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தவர்,  இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆயிரத்து 900 ரூபாய் என்று அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.  சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அளவில் திமுகவின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதையும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்வதையும் ஒப்பிட்டு அதனை அரசுக்கு சுட்டிக்காட்டி நினைவுபடுத்துவது,  அதை நிறைவேற்ற வலியுறுத்துவதும்,  எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இதை  கொண்டு வருகிறேன்.

ops

தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியாக கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சார்பாகவும் , அதிமுக கழகத்தின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.