“அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை”- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

 
ச் ச்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.


அரைமணிநேர சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். முதலமைச்சரை நலம் விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மு.க.முத்து மறைவுக்கும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.  உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் நிமித்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக நானும் பேசவில்லை, விஜயும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.