பொங்கல் பண்டிகை 2022 : ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து!!

 
ops eps

பொங்கல் பண்டிகையையொட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உலகில் வாழும் தமிழர் பெருமக்கள் அனைவரும் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். 

ops

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அன்பார்ந்த தமிழ் மக்களே,உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சாதி மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நன்றியுணர்வு என்னும் ஒரே நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்; உழவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மகிழ்ச்சியடையட்டும் என மனதார வாழ்த்துகிறேன். #பொங்கல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

EPS

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில் ,தமிழர்கள் இல்லங்களில் அன்பும்,அமைதியும்,வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும். அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #பொங்கல் திருநாள் வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.