பொங்கல் திருநாள் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து!!

 
admk

பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர். 

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் புதுமை பொங்க, இளமை தங்க, செல்வம் பெருக , வளமை வளர அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் ,காணும் பொங்கல் என நான்கு நாட்கள்  விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

op

தை முதல் நாளன்று புதுப்பானையில் அரிசியிட்டு, பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி ,அனைவரும் ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து உள்ள மகிழ்ச்சியுடன், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புது பானையில் உள்ள நற்பொங்கல்  நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும் வளமும் பெறும். பிறருக்கு உணவு வழங்கி உண்ன நினைப்பது தெய்வ பண்பாகும்.  அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள், தெய்வ பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட , தமிழக மாண்புமிகு அம்மா அவர்களும் , அதனை தொடர்ந்து அம்மாவின் அரசும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி, சீரிய முறையில் செயல்படுகின்றன என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவு கூற விரும்புகிறேன்.

op

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும், நிலவட்டும் நலமும் வளமும் பெருகட்டும் . கடினமாக உழைத்து வரும் நம் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சித்தலைவி அம்மா வழியில் மனதார வாழ்த்தி எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.