“எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் இணைய நான் தயார்”- ஓபிஎஸ்

 
“எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் இணைய நான் தயார்”- ஓபிஎஸ் “எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் இணைய நான் தயார்”- ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மதுரையில் செப்டம்பரில் நடைபெறும் மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வாக அமையும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “கட்சி தொடங்கிய பின் விஜய் இன்று வரை நன்றாகத் தான் செயல்படுகிறார். விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு. விஜய்யுடைய அரசியல் நகர்வு இன்று வரை நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவருடைய நகர்வைப் பொறுத்து எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தியாவில் 33 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஒரே சுயேச்சை வேட்பாளர்தான் இந்த பன்னீர்செல்வம்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மதுரையில் செப்டம்பரில் நடைபெறும் மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வாக அமையும். எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் இணைய நான் தயார். உடன் இருப்பவர்களுக்கு பதவி பெற்று தரப்படும்” என்றார்.