அதிமுகவில் என்னை இணைத்து செயல்படுவதற்கான முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட வேண்டும்- ஓபிஎஸ்
முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஓபிஎஸ், “எந்த ஒரு முடிவும் ஏற்படாமல் வதந்தியை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் செய்தி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருப்பார்களா? என்பதற்காகவே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். 12 நாட்கள் தான் எனது தேர்தல் பிரச்சாரம் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகிதிகளில் இருந்து 6 ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினார்கள். அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை மீட்பதற்காகவே சட்டப் போராட்டம் நடத்தி மீட்பது தான் எங்கள் நோக்கம். தேர்தலில் தனி கட்சி துவங்காவது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டமாக போராடி வருகிறேன். தேவை இல்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா என இருவரை முதலமைச்சராக ஆக்கியது இந்த தேனி மாவட்டம். என்னோடு இருப்பவர்கள், கழகத்தை மீட்பதற்காகவே நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதே நோக்கம். தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உன்மையாகிவிடாது என்பதை கடம்பூர் ராஜூக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். என்டிஏ கூட்டணிக்கு நான் வருவதே எனது ஆசை என டிடிவி தினகரன் நட்பின் அடிப்படையில் கூறியுள்ளார். டிடிவி தினகரன், எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார். அதை தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும். இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரால் தான். தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் ரெடி டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் ரெடியா?” என முடித்தார்.


