"மோடியும், அமித்ஷாவும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள்”- ஓபிஎஸ்

 
Ops

தேர்தல் வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற வந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ops

அப்போது செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கேட்டபோது, கழகம் ஒன்று பட வேண்டும், எம்ஜிஆர் எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தரோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் இந்த இயக்கத்தை  யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர் செங்கோட்டையன், அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டு வருகிறார் என்றும், இந்த இயக்கம் தொண்டர்களுக்காக தான் எம்ஜிஆர் உருவாக்கினார் அந்த வகையில் இந்த இயக்கத்தில் உள்ள 2 கோடி தொண்டர்களும் தற்போது கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறது அந்த வகையில் செங்கோட்டை எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்


பாஜக குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக இந்தியாவை ஆளும்கட்சி,18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ளது, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பினால் இயக்கம் சென்று கொண்டிருக்கிற காரணத்தினால், கூட்டணியில் இருந்து வெளியே வந்தாலும் பாஜக தலைவர் பேசிக்கொண்டு வருகிறார்கள். அவர்களும் ஒருங்கிணைப்பை விரும்புகிறார்கள், எங்களுடைய சட்ட போராட்டம் தொடரும் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார். பொதுச்செயலாளர் என்பவரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி யாராலும் மாற்ற முடியாது அந்த அடிப்படை விதியையே மாற்றி இருக்கிறார்கள் இதற்கான சட்ட போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.