"செங்கோட்டையன் என்னிடம் பேசினார்"- ஓபிஎஸ்

 
ச்ந் ச்ந்

நயினார் நாகேந்திரனிடம் எனது செல்போன் எண் உள்ளது, அவர் பேசட்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கட்சி ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற எனது கருத்தை செங்கோட்டையன் கூறத் தொடங்கியுள்ளார். கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியுமென்று  3 வருடங்களாக சொல்லிக் கொண்டு வருகிறேன். அதற்கு செங்கோட்டையன் முயற்சி எடுக்கிறார். அவர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். நயினார் நாகேந்திரனிடம் எனது செல்போன் எண் உள்ளது, அவர் பேசட்டும். தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல முடியாது” என்றார்.

ஒருங்கிணைப்பு தொடர்பாக யாராவது பேசினார்களா? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் தன்னிடம் பேசியுள்ளதாக ஓபிஎஸ் பெரியகுளத்தில் பேட்டி