“NDA கூட்டணியிலிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை"- ஓ.பன்னீர்செல்வம்

 
ops

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எதிர்காலத்தில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு பின்பும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பது சட்டவிரோதம். காவிரி பிரச்சனையை தீர்ப்பதற்காகவே காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது. தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதமானது என சட்டப்படியோ, பேச்சுவார்த்தை மூலமோ காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த ஆண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ந் தேதி திறக்கப்பட்டது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஆனால், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை திறக்காத காரணத்தினால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு பகுதியில் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா மாத வாரியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் வற்புறுத்தியது. அதற்குரிய பலன் கிடைக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடதக்கது.