முதலமைச்சர் தன்னை சந்திக்க வந்தது ஏன்?- ஓபிஎஸ் பேட்டி

 
ops

துக்கம் விசாரிக்கவே தனது வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

mk stalin ops


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் பிப்ரவரி 25ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

mk stalin ops

இந்நிலையில்,  சொந்த ஊரில் இருந்து நேற்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்தை இன்று காலை கிரீன்வேஸ் இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.  அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்டோரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்பு தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்தனர்.  பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக நாளை விரிவாக பேசுகிறேன்” என்றார்.