சென்னையில் உதயமான எம்.ஜி.ஆர் மாளிகை!

 
அதிமுக தலைமை அலுவலகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை || AIADMK  executives consulting about CM candidate confusion

அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு,  எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையின் தொடர்ச்சியாக இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை  அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.