தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சியா? : ஓபிஎஸ் ஆவேசம்!

 
ops

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்ற பொது மக்கள் அச்சப்படும் அளவுக்கு நேற்று காவல்துறை ஆய்வாளர், இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி அளிப்பதோடு, தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ops

நேற்று காலை 9.30 மணிக்கு கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, அருகில் உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அந்த வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது, இந்த நிகழ்வில் படுகாயமடைந்த கனகராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரமும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழக முதல்வர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த கனகராஜ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு,  அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

stalin

 தமிழக முதல்வர் அவர்களே  அடையாளம் தெரியாத வாகனம் என்று குறிப்பிடுவதை வைத்து பார்க்கும்போது , மோதிய வாகனம் நிற்காமல் சென்றதை வைத்து பார்க்கும்போது, விபத்தாக இருக்காதோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இடம் இருந்து தப்பிப்பதற்காக தான் வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்று உள்ளதா? என்ற கோணத்தில் ,காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்றும் விசாரணை முடிவில் ஒருவேளை விபத்தாக இல்லாமல் இருந்தால் மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளார், முதல்வர் பணியில் இருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கி இருப்பது பாரபட்சமாக இருக்கிறது என்று பொது மக்கள் கருதுகிறார்கள்.  எனவே முதல்வர் ஸ்டாலின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காவலர் காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிர் இழப்புக்கு, காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க எடுத்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும்  மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மோட்டார் வாகன ஆய்வாளர் பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால் காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கு வழங்கியதைப் போல முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும் ,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.