அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்!!

 
ops

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு பணியில் அடுத்தகட்டமாக கடந்த 3ஆம் தேதி முதல் 15 - 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக முதல்வர் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தை எம்ஆர்சி நகரில் நேற்று தொடங்கி வைத்தார். 

Corona

தற்போது பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. நமது மாநிலத்தில் இதுவரை 8 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 256 கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 15 முதல் 18 வயதுள்ள 23 லட்சத்து 34 ஆயிரத்து 545 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன் களப்பணியாளர் என்ற முறையில் இன்று முன்னெச்சரிக்கை தடுப்பூசியான பூஸ்டரை செலுத்தி கொண்டார்.

ops

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.