“திமுக கொரோனா என்றால், தவெக உருமாறிய கொரோனா”- இன்பதுரை எம்பி
மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என அதிமுக எம்பி இன்பதுரை சாடியுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி, மக்கள் வரிப்பணத்தில் இங்கிலாந்து சென்ற @CMOTamilnadu இன்று லண்டனில் கார் ரேசை கண்டுகளிப்பது என்பது — அன்று மக்கள் வரிப்பணத்தில் @arivalayam அரசு கார் ரேஸ் நடத்தியதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல!
— I.S.INBADURAI (@IInbadurai) September 13, 2026
மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும்… pic.twitter.com/HLuaLKV77i
இதுதொடர்பாக இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில், “முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி, மக்கள் வரிப்பணத்தில் இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய் இன்று லண்டனில் கார் ரேசை கண்டுகளிப்பது என்பது — அன்று மக்கள் வரிப்பணத்தில் திமுக அரசு கார் ரேஸ் நடத்தியதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல! மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல! திமுக கொரோனா என்றால், தவெக உருமாறிய கொரோனா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

