"இது 100 சதவீத குதிரை பேரம்"- அதிமுக எம்.பி. இன்பதுரை
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி அணி என இரண்டு அணிகள் இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை…
— I.S.INBADURAI (@IInbadurai) May 25, 2026
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள அதிமுக எம்பி இன்பதுரை, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்!” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

