விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிய வாய்ப்பு- அதிமுக

 
முதல்வர் நாற்காலியில் விஜய்!

தற்போதும் முதலமைச்சர் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது என எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த எம்.பி. இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை” - எம்.எல்.ஏ.க்களுக்கு இன்பதுரை எம்.பி.  எச்சரிக்கை!

வழக்கறிஞரும் அதிமுக எம்.பி.யுமான இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில், "குதிரை பேர விவகாரத்தில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிய வாய்ப்புள்ளது. 1993-ல் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல, ஜேஎம்எம் எம்பிக்கள் ஆதரவை குறுக்குவழியில் பெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதே பாணியில் தற்போது முதல்வர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மத்தியில் பாஜக ஆளும் நிலையில் கூட்டணி கட்சி எம்பியான இன்பதுரையின் கருத்து தவெகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக உள்ளது.