ஆளுநா் என்ன செய்து கொண்டிருக்கிறாா்?- அதிமுக எம்.பி. இன்பதுரை ஆவேசம்

 
ஆளுநா் என்ன செய்து கொண்டிருக்கிறாா்?- அதிமுக எம்.பி. இன்பதுரை ஆவேசம்

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, தவெக அமைச்சரவை கூட்டத்தில் இருவர் பங்கேற்றதாக அதிமுக எம்.பி. இன்பதுரை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

Image

அண்ணா தி.மு.க. சட்டமன்ற கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் தமிழக ஆளுநர் அர்லேக்கரை மக்கள் பலனில் சந்தித்து த.வெ க ஆட்சியாளர்களின் குதிரை பேர செயல் குறித்து புகார் மனு அளித்தனர். ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. இன்பதுரை, “ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, தவெக அமைச்சரவை கூட்டத்தில் இருவர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசின் ரகசியங்கள் கசிய வாய்ப்புள்ளதால் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தொிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் என்ன செய்து கொண்டிருக்கிறாா்? ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெகவினா் கேட்ட போது குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டேன் ஆளுநா் எனக்கூறினாா். இப்போது குதிரை பேரம் தான் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் ஆளுநரோ நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக மனு மீது சபாநாயகா் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்தும் ஆளுநாிடம் முறையிட்டோம் . ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, தவெக அமைச்சரவை கூட்டத்தில் இருவர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசின் ரகசியங்கள் கசிய வாய்ப்புள்ளதால் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.